Punctuation | நிறுத்தக்குறியீடு

Punctuation
நிறுத்தக்குறியீடு



Punctuation meaning in Tamil

ஒரு வாக்கியத்தில் உள்ள நிறுத்தக்குறியீடுகள் punctuation  அந்த வாக்கியத்தின் அதன் தனித்தன்மை உணர்வினை வெளிப்படுத்தப் பெரிதும் உதவுகின்றன.
அந்த வாக்கியதைப் பற்றி பேசுபவரும், படிப்பவரும், கேட்பவரும் அதன் உணர்வினை புரிந்து கொள்ள பெரிதும் உதவும் கருவி Punctuation ஆகும்.

Punctuation examples

➔ Wow! It's marvelous.
➔ I eat an apple.
➔ I like apple, orange, pineapple.

Punctuation list 

All punctuation marks
S. NoPunctuation symbols Punctuation mark name Punctuation tamil name
1. . Full stop முற்றுப்புள்ளி
2. , Comma கமா, கால் புள்ளி
3. ? Question mark கேள்வி குறி
4. ! Exclamation mark ஆச்சரியக்குறி
5. "" Quotation mark மேற்கோள் குறி
6. ABC Capital letter பெரிய எழுத்து
7. ; Semi Colon அரைப்புள்ளி
8. : Colon முக்காற்புள்ளி
9. - Dash இடைக்கோடு
10. - Hyphen ஹைபன்
11. () Parentheses அடைப்புக்குறி
12. []Brackets அடைப்புக்குறி
13. {}Braces பிரேஸ்
14. ' Apostrophe எழுத்தெச்சக்குறி
15. ... Ellipsis வாக்கியச் சொல் எச்சம்

Types of punctuation

ஆங்கிலத்தில் 15 வகை ஆனா punctuations உள்ளது. அதில் 6 மிகவும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
1. Full stop
2. Comma
3. Question mark
4. Exclamation mark
5. Quotation mark
6. Capital letter
Ellipsis, Semi Colon, Colon, Dash, Hyphen, Parentheses, Brackets, Braces, Apostrophe.

How to use punctuation marks?

1. Full stop mark

Punctuation symbols :  ( . )
Punctuation mark name :  முற்றுப்புள்ளி.
Punctuation rules : வாக்கியத்தின் இறுதியில் (.) முற்றுப்புள்ளியை எழுத வேண்டும்.

Full stop mark punctuation examples
➔ I eat an apple.
➩ நான் ஆப்பிள் பழம் உண்கிறேன்.
➔ I wrote a article.
➩ நான் ஒரு கட்டுரை எழுதினேன்.
➔ He is playing.
➩ அவன் விளையாடி கொண்டிருக்கிறான்.

2. Comma mark

Punctuation symbols :  ( , )
Punctuation mark name :  கமா, கால் புள்ளி.
Punctuation rules : சிறு நிறுத்தங்கள் வரும் இடங்களில் அடுத்தடுத்து place, name, things பெயர்களை எழுதும் பொழுது நாம் இந்த கமா (,) குறியினை எழுத வேண்டும்.
Comma mark punctuation examples
➔ I eat apple, orange, banana and pineapple.
➔ I play football, volleyball, cricket and kabbadi.

3. Question mark

Punctuation symbols :  (?)
Punctuation mark name:  கேள்வி குறி.
Punctuation rules : ஒரு வினா கேள்வி கேக்கும்  போது அதன் இறுதியில் கேள்வி குறி (?) எழுத வேண்டும்.

Question mark punctuation examples
➔ Who are you?
➩ யார் நீ?
➔ What is your name?
➩ உங்கள் பெயர் என்ன?

4. Exclamation mark

Punctuation symbols : (!)
Punctuation mark name : ஆச்சரியக்குறி .
Punctuation rules : ஒரு வியப்பினை தெரிவிக்கும் சொற்களை பயன்படுத்தினால் அதன் இறுதியில் ஆச்சரியக்குறி ( ! ) எழுத வேண்டும்.

Exclamation mark punctuation examples
➔ Wow! Blue car.
➔ How amazing this match is!

5. Quotation mark

Punctuation symbols :  ( "' )
Punctuation mark name : மேற்கோள் குறி.
Punctuation rules : மிகவும் முக்கியமான வாக்கியங்களை மேற்கோள் காட்டும் போது  மேற்கோள் குறி ( "' )  நாம் இந்த குறிகள் உள் எழுத வேண்டும்.

Quotation mark punctuation examples
➔ Vivekananda says "In a conflict between the heart and the brain, follow your heart. "
➩ விவேகானந்தர் கூறுகிறார் "இதயத்திற்கும் மூளைக்கும் இடையிலான மோதலில், உங்கள் இதயத்தைப் பின்பற்றுங்கள்."

6. Capital letter

Punctuation symbols :  ( ABC...)
Punctuation mark name :  பெரியயெழுத்து.
Punctuation rules : நாம் ஏதேனும் ஊரின் பெயர், ஒரு நபரின் பெயர் குறிப்பிடும் போது நாம் அதன் முதல் எழுத்து capital எழுத்தில் எழுத வேண்டும்.

Punctuation marks with examples
➔ I am live in Delhi.
➩ நான் டெல்லியில் வசிக்கிறேன்.
➔ My name is Mugesh.
➩ என் பெயர் முகேஷ்.

7. Semi Colon

Punctuation symbols :  ( ;)
Punctuation mark name : அரைப்புள்ளி. 
Punctuation rules : கால் புள்ளி மேல் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் அது தான் அரைப்புள்ளி ஆகும்.

இரண்டு independent clauses இணைக்க பயன்படும். பொதுவாக நாம் இரண்டு independent clauses இணைக்க conjunction பயன்படுத்துவோம். ஆனால் அதற்கு பதில் நாம் அரைப்புள்ளி பயன்படுத்தலம்.

Semi Colon punctuation examples
➔ She is beautiful ; not clever.
➩ அவள் அழகாக இருக்கிறாள் ;  புத்திசாலி இல்லை.
➔ Like remove conjunction word but

8. Colon

Punctuation symbols :  ( : )
Punctuation mark name :  முக்காற்புள்ளி.
Punctuation rules : இரண்டு முற்றுப்புள்ளி ஒன்றுக்கு மேல் ஒன்று இணையாக அமைக்க பட்டிருக்கும் அதை முக்கார்ப்புள்ளி என்று அழைப்பர்.
ஒரு குறிப்பிட்ட தொகுப்பு அறிமுகம், பட்டியல், மேற்கோள், வலியுறுத்த மற்றும் இரண்டு clauses இடையே விளக்கம் கொடுப்பதற்கு பயன்படும்.

Colon punctuation mark examples
➔ There are several types of feeling in the human being : sad, happy, angry, fear, cry, awkward.

9. Dash

Punctuation symbols :  ( - or -)
Punctuation mark name : இடைக்கோடு.
Punctuation rules : இரண்டு வகையான இடைக்கோடுகள் உள்ளன EN, EM
ஆகும்.
EN dash - இது இரண்டு வகை ஆனா பொருள், நம்பர், பக்கம், ஆண்டு இணைக்க பயன்படும்.

en dash punctuation mark examples
➔ I wrote story pages between 30-35 of the book.

EM dash - இது comma , colon, parenthesis, மாற்றக பயன்படுத்தலாம்.
ஒரு வாக்கியத்தின் முடிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பினால் நீங்கள் இந்த EM dash பயன்படுத்திக்கொள்ளலாம்.
em dash punctuation mark examples
➔ You were eating well - Yes!

10. Hyphen

Punctuation symbols :  ( - )
Punctuation mark name :  ஹைபன்.
Punctuation rules : Hyphen வந்து dash மாதறி ஒரே வடிவமைப்பு கொண்டது. ஆனால் இது compound word பயன்படுத்தும் போது இதை பயன்படுத்த வேண்டும்.

Hyphen punctuation examples
➔ I take my text-book.
➔ I am working a part-time job.

11. Parentheses

Punctuation symbols :  ( () )
Punctuation mark name :  அடைப்புக்குறி.
Punctuation rules : சில சந்தர்ப்பங்களில், அடைப்புக்குறிக்குள் முக்கியமான கூடுதல் தகவலைக் குறிப்பிட்டு காண்பீர்கள். அது படிப்பவர்களுக்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாமல்  தவிர்க்கலாம்.

Parentheses punctuation examples
➔  I speak (Tamil, English)

12. Brackets

Punctuation symbols :  ([])
Punctuation mark name :  அடைப்புக்குறி.
Punctuation rules : இதும் அடைப்புக்குறி மாதறிதான் முக்கியமான விசயங்களை பிரித்து படிப்பவருக்கு எளிமையாக இருக்கும்.

Brackets punctuation examples
➔ My sister said " I could speak with him [ big brother] but i couldn't see him.


13. Braces

Punctuation symbols :  {} )
Punctuation mark name : பிரேஸ்.
Punctuation rules : இது பெரும்பாலும் இரண்டு மூன்று வரிகளை ஒரு வாரியாக காட்டுவதற்கு பயன்படுகிறது. அதிகமாக கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் பயன்படுத்தப்படும்.

Braces punctuation examples
➔ { 1+ (3+4)+ 7 }

14. Apostrophe

Punctuation symbols :  ( ' )
Punctuation mark name :  எழுத்தெச்சக்குறி.
Punctuation rules : எழுத்தெச்சக்குறி இது நாம் ஒரு வார்த்தையே contraction எழுதும் பொழுது நாம் பயன்படுத்துவோம். Contraction என்பது வார்த்தையே சுருக்குவது.

Apostrophe punctuation examples
➔ I don't like apple.
➔ I've a car.

15. Ellipsis

Punctuation symbols :  ( ... )
Punctuation mark name :  வாக்கியச் சொல் எச்சம்.
Punctuation rules : வாக்கியச் சொல் எச்சம் என்பது சில நேரங்களில் நாம் ஒரு எண் தொடர் அல்லது எதாவது ஒரு collection வகை குறிப்பிடும் பொழுது நாம் அதை முழுவதுமாக சொல்லாமல் எழுதாமல் இருக்க அதன் தொடர்ச்சில் இந்த ellipsis பயன்படுத்தவேண்டும்.

Ellipsis punctuation examples
➔ He count "one, two, thee, four ..."
➔ He eat " apple, orange, banana... "

 Punctuation image

Punctuation | நிறுத்தக்குறியீடு
Punctuation List



Punctuation checker

கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense