Type Of Sentence In English?
The Sentences
ஒரு வாக்கியம் என்பது முதல் எழுத்து கேப்பிட்டல் Capital letter எழுத்தில் எழுத வேண்டும் மற்றும் அதன் இறுதியில் ஒரு நிறுத்தல் Punctuation குறியீடு கட்டாயமாக இருக்க வேண்டும்.
ஒரு வாக்கியம் பல சொற்க்களை கொண்டதாக இருந்தாலும் அந்த வாக்கியம் முழு அர்த்தத்தையும் தரவேண்டும் அப்போதான் அது ஒரு வாக்கியம் ஆகும்.
Kinds Of Sentence
வாக்கியத்தின் வகைகள் ஐந்து வகை படும்.
Type Of Sentence |
1. Affirmative Sentence or Declarative Sentence or Assertive Sentence
உடன்பாட்டு வாக்கியம்
ஒரு செயலை அல்லது ஒரு இயல்பான கூற்றைக் ( statement ) குறிக்கும் வாக்கியம் ஆகும்.
இதன் இறுதியில் முற்று புள்ளி (.) வைத்து முடிக்க வேண்டும்.
2. Negative Sentence
எதிர்மறை வாக்கியம்
ஒரு செயல் நடக்கவில்லை என்பதை கூறிக்கும் வாக்கியம் தான் இந்த negative sentence ஆகும். மேலும் எதிர்மறையான ஒரு கருத்தை கூறுவதற்கு பயன்படும் வாக்கியம் ஆகும்.
3. Interrogative Sentence
வினா வாக்கியம்
வினா வாக்கியம் என்பது ஒரு கேள்வியே கேட்பதற்கு பயன்படும் இது வினா வாக்கியம் ஆகும்.
அதாவது Police Investigation ( Interrogative )போலீஸ் விசாரணை கேள்வி கேப்பது போல நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த வாக்கியத்தின் இறுதியில் கேள்வி குறி (question Mark ) வரவேண்டும்.
4. Imperative Sentence
கட்டளை வாக்கியம்
இந்த வாக்கியம் ஒரு கட்டளை Command கூறுவது போல வரும் வாக்கியம் ஆகும். இதில் எழுவாய் You நீ subject 'ஆக மறைந்து வரும். இதன் இறுதியில் முற்று புள்ளி வரும்.
5. Exclamatory Sentence
வியப்பு வாக்கியம்
ஒரு வியப்பான விசியம் வரும் வாக்கியம் exclamatory sentence ஆகும்.
இதன் இறுதியில் ஆச்சிரியக்குறி ! இட வேண்டும்.
type of sentence example |
Types of Sentence
அடுத்த கட்டுரையில் இவற்றை பற்றி தெளிவாக பார்ப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக